கோபிசெட்டிபாளையம்-சத்தி மெயின் ரோட்டில் ல.கள்ளிப்பட்டி பிரிவில் உள்ள சாலையில் 2 இடங்களில் குடிநீர் குழாய் பழுது பார்க்க தோண்டப்பட்ட குழியை சரியாக மூடவில்லை. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் குழிக்குள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குழியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.