பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-09-21 12:43 GMT
பாப்பாக்குடி யூனியன் சங்கன்திரடு ஊராட்சி பாராதியார்புரம் மெயின் ரோட்டில் இருந்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால் அதனை இடித்து அகற்றினர். பின்னர் 1½ ஆண்டுக்கு மேலாகியும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர். சில பஸ்கள் அங்கு நிற்காமல் சென்று விடுவதால் பொதுமக்கள் சேரன்மாதேவி விலக்குக்கு நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே புதிய பயணிகள் நிழற்கூடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்