திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ரவுண்டனா அருகேயுள்ள நெடுஞ்சாலைகளின் ஓரம் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் ரவுண்டானா பகுதியை கடப்பதற்கே 10 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளை அங்கிருந்து அகற்ற போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.