சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவின் இரு புறங்களிலும் குடியிருப்புவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய கார்களை மர்ம நபர்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.