உத்தமபாளையம் கோட்டைமேடு வளைவில் இருந்த வேகத்தடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சிக்காக அகற்றப்பட்டது. அதன் பிறகு மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விரைவில் வேகத்தடை ஏற்படுத்த வேண்டும்.