ஆப்பக்கூடலில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் கைகாட்டி பிரிவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இவற்றை மரக்கிளைகள் மறைத்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். இதை தவிர்க்க மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?