பாலம் அமைக்க வேண்டும்

Update: 2025-08-17 17:50 GMT

தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் இருந்து கொடராபாளையம் செல்லும் வழியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் கடந்து நாமக்கல் மாவட்டம் வெப்படை வரை செல்கிறது. இந்த நிலையில் புள்ளாக்கவுண்டம்பட்டி மேல்புதூர் பகுதியில் செல்லும் கிழக்குக்கரை கால்வாய் பகுதியில் பாலம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிறிய தகர பாலம் அமைத்து கால்வாய் கரையை கடந்து கொடராபாளையம் பகுதிக்கு ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் அதிகாரிகள் பார்வையிட்டு கால்வாயின் குறுக்கே புதிதாக பாலம் அமைக்க வேண்டும்.

-ஊர் பொதுமக்கள், தேவூர்.

மேலும் செய்திகள்