கூடுதல் பஸ்வசதி தேவை

Update: 2025-08-17 16:05 GMT
சிதம்பரம்- நந்திமங்கலம் வழியாக செல்லும் வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஆனால் போதுமான அளவுக்கு பஸ் இயக்கப்படாததால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மேலும் சில மாணவர்கள் நடந்தே செல்லும் அவலநிலையும் உள்ளது. இதை தவிர்க்க அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்