கடலூர் சாவடி- நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நுழைவு வாயில் அருகே வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது. இதன் மேலே மூடப்பட்டிருக்கும் சிமெண்டு சிலாப் உடைந்துள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் வயதானவர்கள் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே உடைந்த சிமெண்டு சிலாப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டியது அவசியமாகும்.