பொதுமக்கள் அவதி

Update: 2025-08-17 13:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் ஒன்று இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளாததால் தற்போது நிழற்குடை ஏதும் இல்லை. ஆனால் இந்த பகுதியைதான் பஸ் ஏறுவதற்கு பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலையின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தினால் அந்த பகுதி மக்கள் பஸ் ஏறும்போது மிகுந்த ஆபத்தை சந்திக்கிறார்கள். பலமுறை இந்த பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூடி, பழையவாறு பஸ் நிழற்குடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்