ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள சத்திரக்குடியில் தற்போது வரை பஸ் நிலையம் இல்லை. இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அவசர தேவைக்கு வெளியூர் செல்லும் பொதுமக்கள் மற்றும் முதியோர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும்.