அந்தியூரில் இருந்து பெருந்துறை சென்று வர இதுவரை நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் அந்த வழியாக பயணம் செய்பவர்கள் மற்றும் கூலிவேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்தியூரில் இருந்து பவானி சென்று நீண்ட நேரம் காத்திருந்து அங்கிருந்து பெருந்துறைக்கு பஸ்களில் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்தியூரில் இருந்து அத்தாணி, கோபி, திங்களூர் வழியாக பெருந்துறை செல்ல பஸ் வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?