அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் ரோட்டின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் சில இடங்களில் கம்பிகள் நீண்டு கொண்டபடி உள்ளன. அதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். எனவே அந்த கம்பிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.