சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

Update: 2025-07-13 12:59 GMT

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி பீலிப்நகர் பகுதி மெயின் சாலையில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த பயணிகள் நிழற்குடை முன் பகுதி இடிந்தும், அமரும் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. மேலும் மேல் சுவர், சுற்றுச்சுவர் வெடிப்பு ஏற்பட்டு சிமெண்டு பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் உ்டனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்