திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் பொன்னியம்மன்மேடு ஆர்.டி.ஓ. ஆபீஸ் அருகே ஜவகர்லால் சாலையில் பஸ் நிறுத்தம் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பஸ்சில் செல்லும் பயணிகள் வெயில் காலங்களில் மிகவும் சிரமம் அடைகின்றனர். வெயிலுக்கு ஒதுங்க மரங்கள் கூட இல்லாததால் வெகுநேரம் வெயிலில் நின்றுகொண்டே காத்திருக்கும் அவலநிலையும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.