பொதுமக்கள் அவதி

Update: 2025-07-13 12:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் இருந்து முடிச்சூர் வழியாக மண்ணிவாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு இடையே மகளிர் விடியல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல நேரங்களில் இந்த வழித்தடங்களில் குறிப்பிட்ட நேர இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்றன் பின் ஒன்றாக 2 முதல் 4 பஸ்கள் வரை செல்கின்றன. இரு வழித்தடங்களிலும் இதே நிலை தான் உள்ளது. இதன்காரணமாக, நீண்டநேர காத்திருப்புக்கு பின்பு தான் அடுத்த பேருந்து வருகிறது. இதனால் தினம்தோறும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த வழித்தடத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் முறையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்