பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதியில் இருந்து மழவன்சேரம்பாடி பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு காணப்படுகிறது. அவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் அந்த பகுதியில் வனவிலங்குகள் மறைந்திருந்தாலும் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.