மதுரை கூத்தியார் குண்டு எய்ம்ஸ் ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பல முனைகளில் இருந்தும் வாகனங்கள் கடந்து செல்வதால் ஒரு புறம் இருந்து மறு புறம் கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். எனவே போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், விபத்தை தவிர்க்கவும் மேற்கண்ட இடத்தில் போக்குவரத்து போலீசாைர நியமிக்க அதிகாரிகள் முன்வருவார்களா?