பழனியை அடுத்த மானூர் தெற்கு தெருவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள் இரவில் அந்த வழியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும்.