செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் நனைந்தவாறும், கோடைகாலத்தில் மரங்களின் நிழலை நாடும் நிலையும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிழற்குடை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.