பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதமடைந்து உள்ளதால், இந்த பயணிகள் நிழற்குடையில் பெண்கள், முதியவர்கள் பஸ் வரும் வரை அமர முடியாமல் கால்கடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையில் சேதமடைந்துள்ள இருக்கைகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.