திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு, சிருவாபுரி பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். மேலும், இந்த கோவிலுக்கு மினி பஸ் செங்குன்றத்தில் இருந்து மட்டும்தான் இயங்குகிறது. பிராட்வே தங்க சாலை இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். இந்த வழித்தடத்தில் மினி பஸ் சிருவாபுரிக்கு இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.