கீழே விழும் வாகன ஓட்டிகள்

Update: 2025-07-06 11:28 GMT

கரூர்-கொடுமுடி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் புன்னம்சத்திரம் கடைவீதி அமைந்துள்ளது. இந்த கடைவீதி சாலையின் இருபுறமும் ஏராளமான மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையோரம் கிடக்கும் மண்கள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் கிடக்கும் மண்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்