ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பெரும்பாலான முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?