பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-06-22 11:38 GMT

கரூர் மாவட்டம் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உப்புப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பஸ்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு உப்புப்பாளையம் செல்லும் சாலை அருகே தார் சாலை ஓரத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பகுதியில் தார் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சாலை மேம்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி