ஓமலூர் வட்டத்திற்கு உட்பட்ட தொளசம்பட்டி அருகே பனங்காட்டூர் கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இருந்து தொளசம்பட்டி மற்றும் அமரகுந்தி போன்ற பகுதிகளுக்கு சென்றுவர போதுமான அரசு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவர சிரமம் அடைகின்றனர். எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
-கிரி, ஓமலூர்.