பயணிகள் அவதி

Update: 2025-06-08 09:44 GMT

கரூர் மாவட்டம் கரைப்பாளையம் அருகே ஆலமரத்துமேடு பகுதி வழியாக நாமக்கல், சேலம், சங்ககிரி, கொடுமுடி, பரமத்தி வேலூரில் இருந்து கொடுமுடி, ஈரோடு கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அதேபோல் அந்த பகுதியிலிருந்து பரமத்தி வேலூர், நாமக்கல், சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. கரைப்பாளையம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் செல்வதற்காக ஆலமரத்துமேடு பகுதிக்கு வந்து நின்று பஸ்சில் ஏறி சென்று வருகின்றனர். மழை, கடும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலமரத்து மேடு பகுதியில் புதிதாக நிழல் கூடம் கட்டிக்கொடுத்து பயணிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி