திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை சங்கீதா ஓட்டல் பஸ் நிறுத்தத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது அந்த வழியாக வரும் பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் ஏமாற்றத்துடன் நிற்கும் நிலை உள்ளது. மேலும் பஸ் நிறுத்தம் சீர்செய்யப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நிறுத்தத்தில் பஸ் நிற்கவும், தூய்மை படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
.