பாராக மாறி வரும் பயணிகள் நிழற்குடை

Update: 2025-05-25 13:02 GMT

பெரம்பலூர் மாவட்டம் பரவாய் கிராமத்தில் குன்னம் செல்லும் சாலையோரத்தில் பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடையை மதுப்பிரியர்கள் சிலர் பார்போல் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இருக்கைகள் இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்