போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-05-25 12:26 GMT

சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி பிரகாசபுரம் விலக்கில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் சாலையோரமாக மின்கம்பங்கள் உள்ளன. தற்போது இந்த சாலையின் எதிர்புறத்திலும் கூடுதலாக 10-க்கும் மேற்பட்ட உயரழுத்த மின்கம்பங்களை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் குறுகலான சாலையில் அரசு பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். எனவே சாலையின் ஒரு புறத்திலே அனைத்து மின்கம்பங்களும் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்