பாதையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

Update: 2025-05-25 12:03 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலத்தில் செட்டேரி அருகே உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதையின் இருபுறமும் கருவேல மரங்கள் முளைத்து பாதையை ஆக்கிரமித்து உள்ளது. இதனால் இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு செல்லும் பாதையின் இருபுறமும் முளைத்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்