அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், வி.கைகாட்டி-அரியலூர் சாலை நகரின் முக்கிய சாலையாக விளங்கி வருகிறது. இந்த சாலையில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் தங்களது இருசக்கர வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கி வருகின்றனர். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள் அச்சத்துடனே நடந்து செல்லும் சூழல் உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தக்க அபராதம் மற்றும் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
