நெய்வேலி கெங்கை கொண்டான் பகுதி விருத்தாசலம்-கடலூர் செல்லும் சாலையில் மாடுகள் சாலையிலேயே இரவு நேரங்களில் படுத்து கிடக்கின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.