அந்தியூரில் இருந்து கொடிவேரி அணை செல்வதற்கு டவுன் பஸ் வசதி கிடையாது. இதனால் பயணிகள், கூலிவேலைக்கு செல்பவர்கள் அந்தியூரில் இருந்து கோபி சென்று அங்கிருந்து கொடிவேரிக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பணம் மற்றும் காலவிரயமாகிறது. எனவே அந்தியூரில் இருந்து அத்தாணி, கள்ளிப்பட்டி, டி.என்.பாளையம் வழியாக கொடிவேரிக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.