போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-05-18 12:07 GMT

கோத்தகிரியில் போக்குவரத்து போலீஸ் நிலைய சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அவை தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்