மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையானது கோடை சீசன் காரணமாக ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அங்குள்ள குறுகிய வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை வாகன ஓட்டிகள் அடையாளம் காணும் வகையில் குவி ஆடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த குவி ஆடிகள் பல இடங்களில் உடைந்து கிடக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்களை சரிவர காண முடியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே அந்த குவி ஆடிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.