பஸ் வசதி வேண்டும்

Update: 2025-05-18 11:24 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வேப்பூர் மற்றும் குன்னம் பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளதால், இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அகரம்சீகூரில் இருந்து வேப்பூர் மற்றும் குன்னம் பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்