சென்னை வில்லிவாக்கம், மொப்பிலியம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை ஆக்கிரமைத்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமல்லாமல் அடிக்கடி சண்டைகளும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.