பயணிகள் அவதி

Update: 2025-05-18 10:21 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், நியூ ஆவடி சாலையில் பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் இருக்கை மிகவும் உயரமாக அமைந்துள்ளது. இதனால், பஸ்சுக்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் தரையில் அமர்ந்து இருக்கும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பயணியரின் இருக்கை உயரத்தை குறைத்து, பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்