விபத்து அபாயம்

Update: 2025-05-18 09:41 GMT
  • whatsapp icon

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், குணமங்கலம் கிராமத்தில் இருந்து அரியலூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் மண் எடுத்துச்செல்லப்படுகிறது. ஆனால் லாரிகளில் தார்ப்பாய் கட்டாமல் செல்வதால் லாரிகளின் பின்னால் செல்லும்போது லாரிகளில் உள்ள கிராவல் மண் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்