வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2025-05-11 11:47 GMT

சென்னை பெசன்ட் நகர், வண்ணாந்துறை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியின் பஸ் நிறுத்தம் முன்பாக ஒரு மாதத்துக்கு முன்பு மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்தும், பள்ளம் இன்னும் மூடப்படவில்லை. மேலும், இந்த பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமான பொருட்களும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயை கிடக்கிறது. இதனால் இந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் செல்கின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்