பண்ருட்டியில் இருந்து திருச்சி செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிக்கு சென்று வரும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.