அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கத்தில் செட்டேரி செல்லும் வழியில் கால்நடை மருத்துவமனை அருகே சாலையின் குறுக்கே செல்லும் சிறு பாலம் உடைந்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிறு பாலத்தை சரி செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.