பயணிகள் இன்றி இயக்கப்படும் பஸ்

Update: 2025-05-04 13:54 GMT

அத்தாணியில் இருந்து அந்தியூருக்கு தினமும் காைல 7.30, மாலை 3.20 மணிக்கு இயக்கப்பட்டு வரும் ஏ20 என்ற அரசு டவுன் பஸ்சில் 5 பயணிகள் மட்டும் சென்று வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் பயணிகள் இன்றியும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பஸ்சை அதிக அளவில் பயணிகள் செல்லும் கோபிசெட்டிபாளையம் - அந்தியூர் இடையே காலை 8.10 மணிக்கு இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்