சென்னை திருமுல்லைவாயில், ஈஸ்வரன்கோவில் தெருவில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகிறது. இதன் அருகில் பிரபலமான பச்சையம்மன் கோவில் உள்ளது. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஈஸ்வரன்கோவில் தெருவை பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.