ஊருக்குள் வராத பஸ்களால் பயணிகள் அவதி

Update: 2025-05-04 13:17 GMT

தூத்துக்குடி- நெல்லை நான்குவழிச்சாலையில் உள்ள புதுக்கோட்டை நகருக்குள் பெரும்பாலான பஸ்கள் வராமல் மெயின் ரோட்டிலேயே சென்று விடுகின்றன. இதனால் பயணிகள் ஆபத்தான முறையில் நான்குவழிச்சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் புதுக்கோட்டை நகருக்குள் வந்து தட்டப்பாறை விலக்கு வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு ஏதுவாக உப்பாற்று ஓடை பழைய பாலத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்