நாகர்கோவிலில் குளச்சலுக்கு திங்கள்சந்தை பணிமனையில் இருந்து தடம் எண் 12 ‘சி’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடந்த சில மாதங்களாக காலை 11.30 மணிக்கு குளச்சல் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பஸ், நாகர்கோவிலுக்கு செல்லாமல் மணவாளக்குறிச்சி வரை வந்து பயணிகளை இறக்கி விட்டு திங்கள்சந்தை பணிமனைக்கு செல்கிறது. இதனால், வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, பேயோடு பகுதியை சேர்ந்த பயணிகளுக்கு 11.45 மணியில் இருந்து 1 மணி வரை எந்த பஸ் வசதியும் இல்லை. எனவே, 12 ‘சி’ அரசு பஸ்சை பழைய நேரத்தில் இயங்கியதை போன்று மீண்டும் இயக்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.