திருப்பூரில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் பணி முடிந்து ஊருக்கு செல்ல நள்ளிரவாகிறது. ஆனால் இரவு 11.30 மணிக்கு மேல் தென்காசி, செங்கோட்டை, ராஜபாளையம், ஆலங்குளம் செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இரவு 12 மணிக்கு பிறகு மேற்கண்ட நகரங்களுக்கு பஸ் இயக்கினால் தென் மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள். எனவே இந்த கோரிக்கையை அரசு போக்குவரத்து கழகம் பரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.