அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்காமல் சற்றுதொலைவில் சென்று நிற்கின்றன. இதனால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் வழியாக இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.