கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்து கிளை சார்பில் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மங்களம், சாமளாபுரம், சோமனூர் பேருந்து நிலையம் வரை சென்று திரும்பும் 5,5A,5B,5C,5D,14 எண் கொண்ட அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பஸ்கள்மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இந்த பஸ்களை 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வழியில் இயக்கினால் பொது மக்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் போக்குவரத்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?